சந்தானம் உதயநிதி இடையில் சண்டை இல்லை...

Bookmark and Share

சந்தானம் உதயநிதி இடையில் சண்டை இல்லை...

கண்ணா லட்டு தின்ன அசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களைத் தயாரித்த சந்தானத்தின் ஹேண்ட்மேட் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் - இனிமே இப்படித்தான்.

சத்தமில்லாமல் முழுப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் சந்தானம். இனிமே இப்படித்தான் படத்திற்கு புதுமுகம் சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார், கோபி ஜெகதீஷ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முருகானந்த் இயக்கி உள்ளார்.

இனிமே இப்படித்தான் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 10ந் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடக்கிறது.  படத்தின் டிரைய்லரை இயக்குனர்கள் சிவா மற்றும் எம்.ராஜேஷ் வெளியிட கவுதம் வாசுதேவ மேனன் பெற்றுக் கொள்கிறார்.

பாடலை சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆர்யாவும், சிம்புவும் இணைந்து வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார்.  உதயநிதி நயன்தாரா காதல் விவகாரத்தில் சந்தானத்துக்கும் உதயநிதிக்கும் மனவருத்தம் என்றும் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டது.

அதன் காரணமாகவே உதயநிதி அடுத்து நடிக்கும் படங்களில் சந்தானத்தை கழற்றிவிட்டு கருணாகரனை காமெடியனாக்கிவிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டநிலையில் தற்போது சந்தானத்தின் பட விழாவில் உதயநிதி கலந்து கொள்கிறார்.

அது மட்டுமல்ல இனிமே இப்படித்தான் படத்தை உதயநிதியில் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வாங்கிவிட்டது. இதன் மூலம் சந்தானம் உதயநிதி இடையில் தகராறு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. 

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions