சந்தானம் – விவேக் படத்துக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

சந்தானம் – விவேக் படத்துக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

தில்லுக்கு துட்டு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தானத்தின் மார்கெட் ஏறுமுகத்தில் உள்ளது. தற்சமயம் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் படங்களில் நடித்துவரும் அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு ‘சக்கப்போடு போடு ராஜா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தானத்தின் நண்பர் விடிவி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் சர்வர் சுந்தரம் படத்தில் ஹீரோயினாக நடித்த வைபவி சாந்தில்யா என்பவரே இந்த படத்திலும் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

நடிகர் விவேக் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.இந்நிலையில் இப்படத்துக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைப்பார் எனவும் அவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions