நடிகையின் கோபத்தினால் மற்றொரு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு

Bookmark and Share

நடிகையின் கோபத்தினால் மற்றொரு நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய சாதிக்கான் என்பவர் எழுதி இயக்கும் புதியபடம் தொல்லைக்காட்சி. இந்தப்படத்தில் மங்காத்தா அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக பரத் ஜோடியாக ஐந்துஐந்துஐந்து படத்தில் நடித்த சாந்தினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தின் தொடக்கவிழா கடந்தஆண்டு ஜூலையில் நடந்தது. உடனே படப்பிடிப்பு நடத்தவிருப்பதாகச் சொல்லியிருந்தனர்.

ஆனால் சில காரணங்களால் அப்போது படப்பிடிப்பு தொடங்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியிருக்கிறது.

படப்பிடிப்புக்கு வந்த நாயகி சாந்தினி, ஒரிரு நாட்கள் நடித்ததும் படப்பிடிப்புக்குழுவினருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். இதனால் கோபித்துக்கொண்டு அவர் கிளம்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

நீண்டநாட்களுக்குப் பிறகு படப்பிடிப்புத் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படியாகிவிட்டதே என்று பதறிய குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தாமலே வேறு நாயகியைத் தேடினார்களாம். 

அவன்இவன், தெகிடி படங்களில் நடித்த ஜனனியின் தேதிகள் இருந்திருக்கிறது. அவருக்கும் இந்தப்படத்தின் கதை பிடித்திருக்கவே உடனே வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறாராம்.

பாலா இயக்கிய அவன்இவன் படத்தில் அறிமுகமானபோதும் தமிழில் அவருக்குச் சொல்லிக்கொள்கிற மாதிரி படங்கள் அமையவில்லை. இப்போது இன்னொரு நடிகையின் பிடிவாதத்தால் இவருக்கு இந்தப்படம் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.    


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions