பள்ளி குழந்தைகளுக்கு தில்லுக்குத் துட்டு படத்தை திரையிட்டு காண்பித்த ஆனந்த்ராஜ்

Bookmark and Share

பள்ளி குழந்தைகளுக்கு தில்லுக்குத் துட்டு படத்தை திரையிட்டு காண்பித்த ஆனந்த்ராஜ்

தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்த ஆனந்த்ராஜ், தற்போது காமெடியனாக மாறியுள்ளார். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இவர் முழுநீள காமெடியனாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில், இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இவருடைய காமெடி குழந்தைகளை பெரிதும் ஈர்த்தது. இந்நிலையில், ஆனந்த் ராஜ் பள்ளி குழந்தைகளுக்காக ‘தில்லுக்கு துட்டு’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.

சென்னை சிட்டி சென்டரில் அமைந்துள்ள ஐநாக்ஸ் திரையரங்களில் ஆனந்த் ராஜ் பள்ளிக் குழந்தைகளுக்காக பிரத்யேக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்களை மகிழ்வித்துள்ளார். ‘தில்லுக்கு துட்டு’ படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். சந்தானம், சனாயா, கருணாஸ், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் காமெடி மற்றும் திகில் கலந்த படமாக வெளிவந்துள்ளது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions