ஏ.ஆர்.ரகுமானிடம் கற்றது சந்தானம் படத்திற்கு கைகொடுத்தது: இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானிடம் கற்றது சந்தானம் படத்திற்கு கைகொடுத்தது: இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

இனிமே இப்படித்தான் படத்திற்கு இசையமைத்தது குறித்து சந்தோஷ் தயாநிதி கூறும்போது, ‘இப்படம் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல்களுக்கு புது சிங்கர்களை வைத்து பாட வைத்துள்ளேன். கானா பாலா ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார். இந்தப் பாடல் சிறப்பாக வந்துள்ளது. மேலும் கானா வினோத் என்பவர் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

நான் ஏ.ஆர்.ரகுமானிடம் ‘கடல்’, ‘லிங்கா’, ‘மரியான்’ உள்ளிட்ட படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியுள்ளேன். ஏ.ஆர்.ரகுமானின் பட்டறையில் பணியாற்றியது இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இப்படத்தின் நாயகன் சந்தானம் நல்ல மனிதர். நான் இப்படத்திற்காக இசையமைத்த டியூன்களை அவரிடம் போட்டு காண்பிக்கும்போது, அவர் எந்த கரெக்சனும் சொல்லவில்லை. உடனே ஓகே சொல்லிவிட்டார். சந்தானத்திற்கு பிடித்ததுபோல் இப்படத்தின் பாடல்கள் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஆடியன்சுக்கு சம்மர் டீரிட்டாக இருக்கும். எனக்கு இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்த சந்தானத்திற்கு மிகவும் நன்றி’ என்றார்.

இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளன. ஆடியோ சிடியை ஆர்யா மற்றும் சிம்பு வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொள்ள இருக்கிறார். அதுபோல் டிரைலரை இயக்குனர் சிவா மற்றும் இயக்குனர் ராஜேஷ் வெளியிட, கௌதம் மேனன் பெற்றுக்கொள்கிறார். 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions