சந்தோஷ் நாராயணனின் எளிமை!

Bookmark and Share

சந்தோஷ் நாராயணனின் எளிமை!

அட்டக்கத்தி படத்தில் இசையமைப்பாளரானவர் சந்தோஷ் நாராயணன். அந்த படத்தில் அவரது இசையில் உருவான, ஆடி போனா ஆவணி, நடு கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா -போன்ற பாடல்கள் மெகா ஹிட்டாகின. அதோடு அந்த படமும் வெற்றி பெற்றதால் அவருக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்தது.

அதையடுத்து, பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே என பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், இப்போது ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். இதனால் கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் அவர்.

ஆனால் சந்தோஷ் நாராயணனிடத்தில் ரஜினி படம் கிடைத்ததற்கான எந்தவித பரபரப்பு, பந்தாவும் இல்லை. வழக்கம்போல் தனது வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

அதோடு, என்னைப்பொறுத்தவரை சின்ன படமோ பெரிய படமோ எதுவாக இருந்தாலும் என் வேலையை ஒரேமாதிரியாகத்தான் செய்வேன். அதேசமயம், பெரிய அளவில் இசைக்கருவிகளை புகுத்தி செலவு செய்யாமல் குறைவான செலவில் இசையமைத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அப்படித்தான் ரஜினி சார் படத்துக்கும் இசையமைக்கிறேன். ஆக, என்னைப்பொறுத்தவரை எப்போதும் எளிமை, எதிலும் எளிமை, அதேசமயம் இசையில் புதுமை இதுதான் எனது பாலிஸி என்கிறார் அவர்.


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions