வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் இணைந்த சந்தோஷ் நாராயணன்

Bookmark and Share

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் இணைந்த சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணனும் ஒருவர். இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன் இணையும் ‘சூதாடி’ படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் கூறும்போது, வெற்றிமாறன்-தனுஷ் இணையும் அடுத்த படத்திற்கு நான் இசையமைக்கவுள்ளேன். முதன்முறையாக கதையை படித்துப் பார்க்காமலேயே நான் இசையமைக்க ஒத்துக் கொண்டது இந்த படத்திற்காகத்தான். படத்தின் தலைப்பை பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறினார்.

‘சூதாடி’ படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கிறது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களுக்கு தனுஷ்-வெற்றிமாறன் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது.

‘மந்திரப் புன்னகை’ படத்தில் நடித்த நடிகை மீனாட்சி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும், பார்த்திபன், பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். தற்போது படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. விரைவில் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.  


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions