சந்தோஷ்நாராயணன் பர்த்டே பார்ட்டியில் ஜோதிகா..!

Bookmark and Share

சந்தோஷ்நாராயணன் பர்த்டே பார்ட்டியில் ஜோதிகா..!

சுமார் எட்டு வருடங்களுக்கு முன் சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, அதன் பிறகு திரைப்படத்துறையிலிருந்து முற்றிலுமாக விலகினார்.

சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பிரீமியர் ஷோக்கள், சினிமா உலகப்பிரமுகர்கள் வீட்டு விசேஷம் என எதிலும் தலைகாட்டவில்லை. முக்கியமாக பார்ட்டிகளுக்கு வரவே மாட்டார்.

இப்படியாக, கணவர் குழந்தைகள் என முழுநேர குடும்பத்தலைவியாகவே இருந்தார் ஜோதிகா. எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்தப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கும் ஜோதிகா, இனி சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களிலும் அடிக்கடி தலைகாட்டுவார் என்று சொல்லப்படுகிறது.

அதற்கு முன்னோட்டமாகவோ என்னவோ சமீபத்தில் நடைபெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் ஜோதிகா. இதுபோன்ற பார்ட்டிகளுக்கு தனியாக வரும் சூர்யா, முதன்முறையாக ஜோதிகாவையும் பார்ட்டிக்கு அழைத்து வந்தது சந்தோஷ் நாராயணன் உட்பட பார்ட்டிக்கு வந்த அனைவருக்குமே சர்ப்ரைஸ்தான்!


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions