மனைவியுடன் சந்தோஷமாக சைக்கிளில் சுற்றிய சந்தோஷ் நாராயணன்

Bookmark and Share

மனைவியுடன் சந்தோஷமாக சைக்கிளில் சுற்றிய சந்தோஷ் நாராயணன்

‘அட்டகத்தி’ படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்திற்குப் பிறகு இவர் இசையமைத்த ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து இவர் இசையில் வெளிவந்த படங்கள் ஹிட்டானதால், இவர் இசைக்கென்று தனி ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கபாலி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையில் பலர் வெளியே செல்வதற்கே தயங்கும் நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தன் மனைவியுடன் சைக்கிளில் பயணம் செய்திருக்கிறார். இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions