அனேகன் வந்தால் எனக்கென்ன? பயப்படாத சாரதி.!

Bookmark and Share

அனேகன் வந்தால் எனக்கென்ன? பயப்படாத சாரதி.!

மலையாளப்படங்கள் தற்போது சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்சனை படத்தை ரிலீஸ் பண்ணுவதுதான். காரணம் தமிழ்ப்படங்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் கூடிக்கொண்டே வருகிறது.

மலையாள ரசிகர்களின் ஆதரவும் இதற்கு நிறையவே இருக்கிறது. கடந்த பொங்கல் தினத்தில் 'ஐ', 'ஆம்பள', 'டார்லிங்' என மூன்று தமிழ்ப்படங்கள் கேரளாவில் வெளியானதால் அன்றைய தினம் ஒரு மலையாள படம் கூட வெளியாகவில்லை..  அதன்பிறகு அந்த படங்களின் அலை கொஞ்சம் ஓய்ந்த நேரம் பார்த்து ஜனவரி-23ல் வரிசையாக நான்கு மலையாள படங்களை ரிலீஸ் செய்தார்கள்.. இவை எல்லாமே மோகன்லால், பிருத்விராஜ், பஹத் பாசில், நிவின் பாலி என முன்னணி நடிகர்கள் நடித்த பெரிய படங்கள் தான்.

ஆனால் அப்போது கூட 'ஐ' யின் தாக்கம் தீவிரமாக இருந்தது.. அடுத்த சோதனையாக அஜித்தின் 'என்னை அறிந்தால்' ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியானதும் பெரிய படங்கள் கூட ஜகா வாங்கின.

இதில் மம்முட்டி நடித்துள்ள 'பயர்மேன்' படமும் அடங்கும்.. ஆனால் ஜெயசூர்யாவின் 'ஆடு' மட்டும் சிலிர்த்துக்கொண்டு வெளியானது.  இன்று  தனுஷின் 'அனேகன்' படம் வெளியாகி இருப்பதால் தொடர்ந்து வழக்கம்போல பெரிய படங்கள் மௌனம் காத்து வருகின்றன.

அனேகன் டீமே கேரளாவிற்கு வந்து புரமொஷனால் நிகழ்ச்சியை நடத்தி சென்றது.. வழக்கம்போல இந்த வாரமும்  மம்முட்டியின் 'பயர்மேன்' ஒதுங்கிக்கொள்ள, சின்ன பட்ஜெட் படமான 'சாரதி' மட்டும் துணிச்சலாக ரிலீசாகியுள்ளது.

காரணம் கதையின் மீது அந்த குழுவினர் வைத்திருக்கும் நம்பிக்கை. இரண்டாவது கதாநாயகனாகவும் ஹீரோவின் நண்பனாகவும் நடித்து வந்த சன்னி வெய்ன் இதில் ஹீரோவாக, ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருக்கிறார்.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions