கண்டிசன் போடும் சரண்யா!

Bookmark and Share

கண்டிசன் போடும் சரண்யா!

தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு சரியான அம்மா நடிகை இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ட்ரி கொடுத்தவர் சரண்யா.

சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படம் அவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்ததால் நம்பிக்கைக்குரிய அம்மா நடிகையானார் சரண்யா.

தொடர்ந்து முத்துக்கு முத்தாக, ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, குட்டிப்புலி, வேலையில்லா பட்டதாரி, என தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

அதோடு, சமீபகாலமாக ராதிகா, ஊர்வசி உள்ளிட்ட மேலும் சில மாஜி ஹீரோயினிகளும் தற்போது அம்மா வேடங்களுக்காக களமிறங்கி விட்டனர். ஆனால் இந்த நேரத்திலும், வாய்ப்புகளுக்காக போட்டி போடுவதில்லை சரண்யா. வழக்கம்போல் படம் முழுக்க வருகிற அழுத்தமான அம்மா வேடம் என்றால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.

மேலும், தனது சம்பள விசயத்திலும் அவர் விட்டுக்கொடுப்பதில்லையாம். நான் நடிப்பில் எந்த குறையும் வைக்க மாட்டேன். அதேபோல் எனக்கான கூலியும் குறையில்லாமல் தர வேண்டும் என்று அட்வான்ஸ் வாங்கும்போதே கண்டிசனாக பேசி விடுகிறாராம் சரண்யா.


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
அடேங்கப்பா சரண்யா பொன்வண்ணனின் மகள்களா இது? - அழகிய புகைப்படம் உள்ளே.!
என் மனைவி குண்டாக இருப்பது தான் பெரிய பிரச்சனையா- கொதித்தெழுந்த சரண்யா மோகன் கணவர்
வில்லியாக மாறிய சரண்யா பொன்வண்ணன்
கேரள ஆஸ்பத்திரியில் நடிகை சரண்யாமோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
தெலுங்கில் வாய்ப்பு - சரண்யாவுக்கு
நடிகை சரண்யா மோகன் திருமண நிச்சயதார்த்தம்: டாக்டரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions