கேரள ஆஸ்பத்திரியில் நடிகை சரண்யாமோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Bookmark and Share

கேரள ஆஸ்பத்திரியில் நடிகை சரண்யாமோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

கேரளாவை சேர்ந்தவர் நடிகை சரண்யாமோகன். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகியாக உயர்ந்தவர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் சரண்யா மோகன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு அவர் ஏராளமான தமிழ் படங்களிலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்தார்.

'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா கபடிக்குழு', 'வேலாயுதம்', 'அழகர்சாமியின் குதிரை' போன்ற படங்கள் சரண்யாமோகனின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சரண்யாமோகன் கடந்த 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிக் கொண்ட சரண்யா மோகன் தனது கணவருடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரண்யாமோகன் கர்ப்பம் அடைந்தார்.

கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சரண்யா மோகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions