சூர்யா படத்தில் சரண்யா-சத்யன்

Bookmark and Share

சூர்யா படத்தில் சரண்யா-சத்யன்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தையடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தற்போது சரண்யா பொன்வண்ணனும் சத்யனும் இணைந்துள்ளனர். இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.

சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘24’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பை மாற்றும்படி பாலிவுட் நடிகர் அனில் கபூர் வற்புறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions