மனசாட்சிப்படி நான் எந்த தவறும் செய்யவில்லை- ஆதாரத்துடன் சரத்குமார்

Bookmark and Share

மனசாட்சிப்படி நான் எந்த தவறும் செய்யவில்லை- ஆதாரத்துடன் சரத்குமார்

நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை, நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது, விஷால் அணியினருக்கு நடிகர் சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் அளித்த பேட்டியில், ''நடிகர் சங்கத்தின் நிலத்தை நாங்கள் விற்கவில்லை. நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது.

சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்றே நடிகர் சங்க கட்டடம் இடிக்கப்பட்டது. அங்கு கட்டடம் கட்ட,  எஸ்பிஐ சினிமாஸ் உடன் ஒப்பந்தம் செய்ததற்கு செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

2010 -ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி,  ஒப்பந்தம் குறித்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது, தலைவர், பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலன் தருமா என விவாதிக்கப்பட்டது.

இது குறித்து பொதுக்குழு, செயற்குழுவில் எதிரணி எதுவும் கூறவில்லை. 

சிறப்பு செயற்குழு கூட்டத்தில் ஒப்பந்தத்தை யாரும் எதிர்க்கவில்லை. எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்திற்கான குத்தகைப் பணம் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய். ஒப்பந்தம் காலம் முடிந்ததும் ஒரு கோடியே 48 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். 29 ஆண்டுகள் 11 மாதங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் குறித்து சங்கத்தை சேர்ந்த யாரும் ஆலோசனை தரவில்லை. 

வருமானத்தின் அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தம் மிகவும் சிறப்பானது. தவறு இருந்தால் அப்போதே சுட்டிக்காட்டி இருக்கலாமே. மனசாட்சிப்படி நான் எந்த தவறு எதுவும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார் சரத்குமார்.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions