நடிகர் நடிகைகளின் வீடு தேடிச் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் சரத்குமார், விஷால்!

Bookmark and Share

நடிகர் நடிகைகளின் வீடு தேடிச் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் சரத்குமார், விஷால்!

நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளதால், விறுவிறுப்பாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர் சரத்குமார் மற்றும் விஷால். எனவே இன்றும் நாளையும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் வீடு தேடிச் சென்று வாக்குகளைச் சேகரிக்கவுள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதியுள்ள வாக்காளர்கள் 3,139 பேர். இவர்களில் 1,175 பேர் வெளியூர்களில் வசிக்கும் தொழில்முறை நாடக நடிகர்-நடிகைகள். இவர்களிடம் இரண்டு அணியினரும் நேரில் சென்று வாக்குச் சேகரித்தனர்..

தற்போது 934 பேர் தபாலில் தங்கள் ஓட்டுகளை அனுப்பி வைத்து விட்டனர். மீதி 241 பேர் நேரில் வாக்களிக்க வருகிறார்கள். சென்னையில் மட்டும் ஓட்டுப்போட தகுதியுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் 1,900-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 

இவர்களிடம் இரு அணியினரும் தற்போது ஆதரவு திரட்டி வருகிறார்கள். சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்ட நடிகை ஸ்ரீப்ரியா தலைமையில் நடிகைகள் வீடு வீடாகச் செல்கிறார்கள். நடிகர்களும் தனி குழுவாகச் சென்று ஓட்டுக் கேட்கிறார்கள். 

இதுபோல் விஷால் அணியை சேர்ந்த ரோகிணி, பிரசன்னா, நந்தா, ரமணா உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கின்றனர். கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் போன்ற பகுதிகளில் தான் நடிகர்-நடிகைகள் அதிகம் வசிக்கின்றனர்.

எனவே அந்த பகுதிகளில் இரு அணியினரும் முற்றுகையிட்டு ஓட்டு சேகரித்து வருவதால் எந்தத் தெருவுக்குப் போனாலும் ஏதாவது ஒரு அணியைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் கூட்டாக வாக்குச் சேகரிப்பதைப் பார்க்கலாம்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions