சரத்குமார், ராதாரவி மீது குற்றப்பிரிவிடம் புகார் அளிக்கவுள்ள நடிகர் சங்கம்!

Bookmark and Share

சரத்குமார், ராதாரவி மீது குற்றப்பிரிவிடம் புகார் அளிக்கவுள்ள நடிகர் சங்கம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 99-வது பிறந்தநாளான நேற்று அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செய்து 4-வது செயற்குழு கூட்டம் 2011-க்கு பிறகு முதல்முறையாக நடிகர் சங்க வளாகத்திலேயே தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

• சென்ற நிர்வாகத்தின்போது எஸ்பிஐ சினிமாஸுக்கும், நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கும் இடையே போடப்பட்ட எல்லா வகை ஒப்பந்த்தங்களையும் முழுவதுமாய் ரத்து செய்யும் அறக்கட்டளையின் முடிவை தென்னிந்திய நடிகர் செயற்குழு ஏகமனதாய் ஏற்றுக்கொண்டது.

• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2014 – 2015 ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கான 2013-2014, 2014-2015 ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு மூன்று மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்பிக்காததால் சென்ற நிர்வாகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மீது பொருளாதார குற்றப் பிரிவிடம் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

• குருதட்சணை திட்டம் என்கிற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் திட்டத்தை வடிவமைத்த துணைத்தலைவர் பொன்வண்ணன், அதை வெற்றிகரமாய் செயல்படுத்திய கோவை சரளா, பசுபதி, ரமணா, உதயா, பூச்சிமுருகன், விக்னேஷ், நந்தா, பிரேம், ஹேமச்சந்திரன், மனோபாலா, ஜுனியர் பாலையா, ராதா ஆகியோரை செயற்குழு பாராட்டியும், வாழ்த்தியும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

• ஏற்கனவே, துணைத்தலைவர் கருணாஸ் பொருப்பில் ஏற்படுத்தப்பட்ட ஏஆர்ஓ-க்கள் சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் மேலும் நெறிப்படுத்த சிவகாமி, குட்டிப்பத்மினி, லலிதாகுமாரி, உதயா, பிரேம், மருதுபாண்டி, விக்னேஷ் கொண்ட உபகுழு அமைக்கப்படுகின்றது என்று செயற்குழுவிற்கு தெரிவிக்கப்படுகிறது.  

சென்றமாதத்திற்கான சங்கம், அறக்கட்டளை வரவு செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்தி சமர்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன் நன்றி கூற செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions