நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சரத்குமார், ராதாரவியை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது: ராதிகா பேட்டி

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சரத்குமார், ராதாரவியை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது: ராதிகா பேட்டி

நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்று நடிகை ராதிகா சரத்குமாரிடம் டுவிட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘‘எங்களுக்கு அழைப்பு வரவில்லை’’ என்று அவர் பதில் அளித்து இருந்தார்.

இதுகுறித்து நிருபரிடம் ராதிகா சரத்குமார் கூறியதாவது:-

‘‘நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எங்களை அழைக்கவில்லை. எனது கணவர் சரத்குமாரிடம் உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்று கேட்டேன். அவரும் அழைப்பு வரவில்லை என்று சொன்னார். அதுபோல் நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவியையும் அழைக்கவில்லை. அவர் மிகவும் வருத்தப்பட்டார். வாகை சந்திரசேகருக்கும் அழைப்பு வரவில்லை.

நாங்களும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக இதை விட அதிகமாக பாடுபட்டு இருக்கிறோம். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிகர் சங்கத்துக்காக நிதி திரட்டி இருக்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வெளி மாநில நடிகர்களையெல்லாம் அழைத்து இருக்கிறார்கள். எங்களை போன்ற மூத்த நடிகர்-நடிகைகள் அழைக்கப்படவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

போட்டி முடிந்த பிறகு பெங்களூரில் உள்ள நடிகர் அம்பரீஷ் வீட்டுக்கு நானும் சரத்குமாரும் சென்று இருந்தோம். நீங்கள் ஏன் நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொள்ளவில்லை? என்று அவர் கேட்டார். ‘‘எங்களுக்கு அழைப்பு வரவில்லை’’ என்று கூறினோம். இதைக் கேட்டதும் அவர் ஆச்சரியப்பட்டார். நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். அது முடிந்து போய் விட்டது.

இப்போது புதிய கட்டிடம் கட்டும் முயற்சி நடப்பதை நாங்கள் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். ஆனாலும், இப்போதுள்ள நிர்வாகிகளுக்கு எல்லா நடிகர்-நடிகைகளையும் அனுசரித்துப் போகும் பக்குவம் இல்லை. வழி நடத்தி செல்வதற்கு சரியான ஆள் இல்லை.’’

இவ்வாறு ராதிகா சரத்குமார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்க தலைவர் நாசரிடம் கேட்டபோது, ‘‘நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொள்ளும்படி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்தோம். டிக்கெட்டுகள் 3 நாட்களுக்கு முன்புதான் எங்கள் கைக்கு வந்தன. எனவே வீடுவீடாக டிக்கெட்டுகளை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம்’’ என்றார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions