பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மனு தாக்கல்

Bookmark and Share

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மனு தாக்கல்

சென்னையில் கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இது குறித்தும், மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிக்கையில் 3.9.2009 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு சினிமா நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊட்டியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரோசாரியோ மரியசூசை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது ஊட்டி குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் விசாரித்து 8 பேரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பினார்.

அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அடுத்த மாதம் (ஜூன்) 17-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.இந்த நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 8 பேர் சார்பில், பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ஊட்டி கோர்ட்டில் வக்கீல் விஷ்வநாத் என்பவர் மூலம் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து வக்கீல் விஷ்வநாத் கூறியதாவது:-நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண்விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பணி காரணமாக ஊட்டி கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. எனவே அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்து உள்ளோம். எங்களது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment

Related News
துப்பாக்கி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? - ஷாக்காகிய புகைப்படம்.!
இமய மலைக்கு போய் கேளுங்க: ரஜினி பற்றி கேள்வி கேட்டதற்கு கோபமான பிரபல நடிகர்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions