சங்கர மடத்தில் சரத் குமார்... விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்!

Bookmark and Share

சங்கர மடத்தில் சரத் குமார்... விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்று விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார். முன்னதாக அங்குள்ள காஞ்சி மகா பெரியவர் பிருந்தாவனத்தில் சில நிமிடம் தியானம் செய்தார். பிறகு சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் சங்கர மடத்தில் இருந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "நீண்ட நாட்களாக காஞ்சீபுரம் சங்கரமடத்திற்கு வந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எங்கள் கட்சியைச் சேர்ந்தவரின் இல்ல நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடந்தது. அதற்காக செங்கல்பட்டு வந்த நான் காஞ்சீபுரத்திற்கு வந்தேன். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அரசின் சாதனைகள் குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டேன். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி," என்றார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions