சரத்குமார் வீட்டில் 15 மணி நேர ஐ.டி. ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் !

Bookmark and Share

சரத்குமார் வீட்டில் 15 மணி நேர ஐ.டி. ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் !

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் காலை 6 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 15 மணி நேரமாக நீடித்த இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கம் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினரால் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை கொட்டிவாக்கம் கல்யாணி நகரில் உள்ள சரத்குமார் வீட்டில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் கூடுதலாக 10 வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை திடீரென டி.டி.வி.தினகரனை சரத்குமார் சந்தித்து ஆதரவு கொடுத்ததன் காரணமாக தான் இந்த சோதனை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில்,15 மணிநேரத்திற்கும் மேலாக சரத்குமார் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.89 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!
மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம்.!
நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!
உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions