ஜி.வி.பிரகாஷுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் சரத்குமார்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் சரத்குமார்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சனா’ படத்தில் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்கு பிறகு தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் இரு வேறு தோற்றத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறாராம்.

ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் இணையும் இந்த படத்தை சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா நடிக்கிறார். சரத்குமார் இந்த படத்திற்காக வாள் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், ‘நெருப்புடா’ பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ், பிளேடு சங்கர், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இப்படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions