சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்

Bookmark and Share

சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்

சமீபகாலமாக புதுமுக இளம் இயக்குனர்கள் இயக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட்டாகி வருகின்றன. ‘துருவங்கள் பதினாறு’, ‘8 தோட்டாக்கள்’ என்ற கிரைம் திரில்லர் பின்னணியில் உருவான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டன. அதே கிரைம் திரில்லர் பாணியில் இளம் இயக்குனர் ஒருவர் சரத்குமாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

பிரித்வி ஆதித்யா என்ற இளம் இயக்குனர்தான் அவர். இவர் இயக்கும் அந்த படத்திற்கு ‘ரெண்டாவது ஆட்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் பிரித்வி கூறும்போது, “என்னுடைய கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத்குமார்தான் என்று என் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருமே கூறினர்.  அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளது. 

இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் 'ரெண்டாவது ஆட்டம்' முழுவதுமாக பூர்த்தி செய்யும். 

அதோடு சரத்குமாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது" என்று உற்சாகத்துடன் கூறினார்.

இப்படத்தை பிக் பிரிண்டர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜுன் மாதம் முதல் தொடங்கவுள்ளனர். 


Post your comment





Related News
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!
மெர்சலுடன் மோதும் பிரபல நடிகரின் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம்.!
நாட்டாமை ரி-மேக் யாருக்கு பொருந்தும் தலைக்கா? தளபதிக்கா? - கருத்து கணிப்பு முடிவு.!
உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions