சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் -2

Bookmark and Share

சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் -2

கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் தயாரிக்கும் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் இந்த படத்துக்கு 'சென்னையில் ஒரு நாள் -2' என்று பெயரிடப்பட்டுள்ளது.பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றம்-23 படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ராம் மோகன்  தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும் 'மாயா' புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர்  இப்படத்தில் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த  குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

'சென்னையில் ஒரு நாள் -2' படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் 'under cover agent' என்றும், அவர் புலன் விசாரணை செய்யும்முறை பரபரப்பாகஇருக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர் ஜெபிஆர். “இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு திருப்பு முனையாக அமையும்” என்றும் சொல்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது. 'சென்னையில் ஒரு நாள் -2' படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி  தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.


Post your comment





Related News
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
கலெக்டர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு - பிரபலங்கள் சொல்வதென்ன?
நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions