நேதாஜியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் சரத்குமார்!

Bookmark and Share

நேதாஜியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் சரத்குமார்!

சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறார் நடிகர் சரத்குமார். நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் சரத்குமார்.

அரசியலில் இருந்தாலும், சினிமாவிலும் தன்னை எப்போதும் நிலைநிறுத்தி கொள்பவர். இவர் நடிப்பில் தற்போது சண்டமாருதம் படம் வெளியாகியுள்ளது. இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.

இந்நிலையில் சண்டமாருதம் படத்திற்கு பிறகு சரத்குமார், நேதாஜியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் பல்வேறு தகவல்களையும் சேகரித்து வருகிறார்.

இதுப்பற்றி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில்,

மகாத்மா காந்தியை போன்று நேதாஜியும் ஒரு சிறந்த தலைவர். அவரைப்பற்றி படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக நேதாஜியை பற்றிய பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறேன்.

சமீபத்தில் அவரது மகளை கூட சந்தித்து பேசினேன். இவரைப்பற்றி படமாக எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. இது ஒரு மிகப்பெரிய பிராஜக்ட். இந்தாண்டு இறுதிக்குள் படத்திற்கான கதை உருவாகிவிடும் என நினைக்கிறேன்.

இப்போது ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியுள்ளது. இன்னும் திரைக்கதை, நடிகர்-நடிகையர் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கிறது. அவை எல்லாம் முடிவானதும் நானே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளில் நேதாஜி குறிப்பிடத்தக்கவர். ஆனால் அவர் இறப்பு பற்றிய சந்தேகங்கள் மர்மமானது. இப்போது வரை அந்த மர்மம் தொடர்கிறது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions