நடிகர் சங்க தேர்தல் பிரச்னை ஏன்? : சரத்குமார் விளக்கம்

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தல் பிரச்னை ஏன்? : சரத்குமார் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்னைக்கு காழ்ப்புணர்ச்சியும், உந்துசக்தியும் காரணம் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது, நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். எதிர்தரப்பினரும் இதையே வலியுறுத்தி வருகின்றனர். நடிகர்களாகிய எங்களுக்குள் ஒற்றுமை நிலவிவருகிறது.

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்னைக்கு, காழ்ப்புணர்ச்சியும், உந்துசக்தியும் காரணம் என கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், ஜூலை மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் காண்கின்றன.

சரத்குமார் அணியில், தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியில், தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு, விஷாலும் போட்டியிட உள்ளனர்.

இரு அணியினரும், போட்டி போட்டுக்கொண்டு, நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions