நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா சரத்குமார்?

Bookmark and Share

நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா சரத்குமார்?

சரத்குமார் தற்போது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என பல பதவிகளில் உள்ளார். படம் நடிப்பதையும் கணிசமாக குறைத்துக் கொண்டார் கடைசியாக தனது சொந்த தயாரிப்பில் சண்டமாருதம் படத்தில் நடித்தார்.

அடுத்து அவர் மிஷ்கின் இயக்கதில் ஒரு படம். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ஏய் இரண்டாம் பாகம், செல்வராஜ் இயக்கத்தில் விடியல் படங்களில் நடிப்பது அவரது அடுத்த திட்டமாக உள்ளது.

இந்த நிலையில் விரைவில் நான் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் சரத்குமார் மதுரைக்கு சென்றார்.

அங்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். "கட்சியை வளர்க்கவும், மக்கள் பணியை தீவிரப்படுத்தவும் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறேன்.

நடிப்பதை கைவிடலாமா? நடிக்காவிட்டால் வருமானத்துக்கு என்ன செய்வது. படம் தயாரிக்கலாமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா என்று யோசித்து வருகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் முக்கிய முடிவு எடுப்பேன்" என்று கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions