அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன்: சரத்குமார்

Bookmark and Share

அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன்: சரத்குமார்

நடிகர் சரத்குமார் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். ஒன்றிரண்டு படங்களை தவிர தற்போது முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சரத்குமார் கூறும்போது, நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். 

வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் சகஜமானதுதான். அது எல்லோருக்கும் ஏற்படும். சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் ஆகும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.

இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம். சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாரும் நானும் இணைந்து ‘ராஜகுமாரா’ என்றபடத்தில் நடிக்கிறோம். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன். இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions