ஜல்லிக்கட்டுக்காக அடுத்த ஆண்டு களம் இறங்கும் சரத்குமார்

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக அடுத்த ஆண்டு களம் இறங்கும் சரத்குமார்

நேற்று ஜல்லிக்கட்டு பிரச்சனியி பற்றி சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தனது சமுதாய கட்சி சார்பாக ஒரு விஷயத்தை கூறினார். அதாவது ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் இன்று வரை ஏமாற்றம். இந்த நிலைமை நீடித்தால் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை தொலைத்துவிட்டு நிற்க வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து தமிழர்களின் கோரிக்கையான ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு ஏதேனும் வழியில் அனுமதி தர வேண்டும். பொங்கல் தினத்திற்கு முன் நிலைமை மாறாவிடில், தடையை உடைப்போம், உணர்வை மதிப்போம் என்ற ஒருமித்த குரலுக்கு வலிமை சேர்ப்போம்.

அடுத்த ஆண்டு கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகள் போன்று விதிமுறைகளை சிறப்பான முறையில் வடிவமைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டையும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தி இவ்வீர விளையாட்டின் புகழை உலகமறிய செய்து தமிழனின் பெருமை காப்போம் என்று கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions