சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை: விஷால் விளக்கம்

Bookmark and Share

சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை: விஷால் விளக்கம்

நடிகர் சங்கத் தலைவர்களில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசும்போது,

நடிகர் சங்க இடம் 19 கிரவுண்ட். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம்போல காட்சி தருகிறது. அதைக் கட்டச்சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல, சிரமப்படும் சுமார் 2500 நடிகர்களுக்காகத்தான். அவர்களின் குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழி பிறக்காதா? என்கிற எண்ணத்தில்தான்.

இந்த விஷயத்தில் நடிகர் சங்கத் தலைவர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.

சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள். ராதாரவி இழிவாகப் பேசினார். என்னைக் கடனை அடைக்க சொன்னார். நடிப்பை கற்றுக் கொள்ளச் சொன்னார். ஏன் அவர்கள் சொன்ன தேதியில்கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கட்டும்.

நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன். என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூர்அலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள்.

இவ்வாறு விஷால் பேசினார். 

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions