நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை

Bookmark and Share

நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள சரத்குமார், ராதாரவிக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஐகோர்ட்டில் கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் பதவி ஏற்றவுடன்,

நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையிலும், நடிகர் சங்கத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள்.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணையில் உள்ளது.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருகிற 27-ந் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழுவில் எங்களை பங்கேற்ற அனு மதிக்கும்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு உத்தரவிடவேண்டும்’ என்று சரத்குமார், ராதாரவி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு நடிகர் சங்கத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்கள் இருவரையும் பொதுக்குழுவில் அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions