வில்லன் வேடத்தில் நடித்தது ஏன்?: சரத்குமார் பேட்டி

Bookmark and Share

வில்லன் வேடத்தில் நடித்தது ஏன்?: சரத்குமார் பேட்டி

‘சண்டமாருதம்’ படத்தில் கதாநாயகன், வில்லன் என இரு வேடங்களில் சரத்குமார் நடித்துள்ளார். நாயகிகளாக மீரா நந்தன், ஓவியா நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின்ஸ்டீபன் இணைந்து தயாரித்துள்ளனர்.

சண்டமாருதம் படம் குறித்து சரத்குமார் அளித்த பேட்டி வருமாறு:–

‘சண்டமாருதம்’ படம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. வருகிற 20–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 250 தியேட்டர்களிலும் மும்பை, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 100 தியேட்டர்களிலும் வெளியிடப்படுகிறது. ஆந்திராவில் 10 நாட்களுக்கு பிறகு வெளியாகும். அதிக உழைப்பு கொடுத்து படத்தை எடுத்துள்ளோம்.

போலீஸ் அதிகாரி வில்லன் என இரு வேடங்களில் நடித்துள்ளேன். வில்லனாக நடிப்பவர்களை ரசிகர்கள் கேரக்டராகத்தான் பார்க்கிறார்கள். இசை படத்தில் சத்யராஜ் வில்லனாக வந்தாலும் அவர் சிறப்பாக நடித்து இருந்தார் என்றுதான் பாராட்டுகின்றனர். கதைக்கு வில்லன் வேடம் வலுவாக இருந்ததால் அதில் நானே நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டார். ஏற்றுக் கொண்டேன். இந்த படம் வெற்றி படமாக அமையும்.

இந்த படத்தை உலகளாவிய மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்ய உள்ளோம். ஜப்பானிய மொழி சப்-டைட்டிலுடன் அந்த நாட்டில் வெளியிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் ஏ.வெங்கடேஷ் கூறும் போது, ‘‘வில்லனையும் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியையும் பற்றி கதை. படம் பிரமாதமாக வந்துள்ளது. வில்லன் கேரக்டரில் சரத்குமார் அபாரமாக நடித்துள்ளார். படம் விறுவிறுப்பாக இருக்கும்’’ என்றார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions