தண்ணீர் கேன் விற்கும் சரத்குமார்!

Bookmark and Share

தண்ணீர் கேன் விற்கும் சரத்குமார்!

சரத்குமார் நடித்த மகாபிரபு, ஏய் ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது அவர்கள் இணைந்திருக்கும் படம் சண்டமாருதம்.

இந்த படத்திலும் வழக்கம்போல் அதிரடியான ஆக்சன் ஹீரோ வேடத்திலேயே நடித்திருக்கிறார் சரத்குமார்.அதோடு, அவருக்கு ஜோடியாக மீராநந்தன், ஓவியா என்ற இரண்டு இளவட்ட நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் கதைப்படி, இமான் அண்ணாச்சி தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கடை நடத்துவாராம். அவரிடம் வேலை செய்யும் சரத்குமார் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போடும் வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

ஆனால், அப்போது தண்ணீர் சம்பந்தமாக ஏற்படும் ஒரு பிரச்சினைதான் விஸ்வரூபம் எடுக்கிறதாம். அதுவரை கடையில் வேலை செய்பவராக நடித்திருக்கும் சரத்குமார், பின்னர் அதிரடி நாயகனாக உருவெடுக்கிறாராம்.

அதையடுத்து ஆக்சன் கோதாவில் இறங்கும் சரத்குமார், தனது ஆரம்ப கால படங்களைப்போன்று சண்டை காட்சிகளில் வரிந்து கட்டியிருக்கிறாராம். அதனால் நீண்டநாளைக்குப்பிறகு சரத்குமாரின் இந்த சண்டமாருதம் பெரிய அளவில் கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions