சண்டமாருதம் 70 தியேட்டர்கள் அதிகரிப்பு: யூனிட்டுக்கு ட்ரீட் கொடுக்கிறார் சரத்குமார்

Bookmark and Share

சண்டமாருதம் 70 தியேட்டர்கள் அதிகரிப்பு: யூனிட்டுக்கு ட்ரீட் கொடுக்கிறார் சரத்குமார்

சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் நடித்த சண்டமாரும் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. 320 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. மறுநாளே திருட்டு விசிடி வந்தது. உடனே சரத்குமார் போலீசிடம் புகார் சொன்னார்.

அவரது சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்கள் திருட்டு விசிடி வைத்திருந்தவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இப்படி மளமளவென காரியங்கள் நடந்தது. சரத்குமாரின் சமீபத்திய படங்களில் இது பெஸ்ட் என்பது பொதுவான விமர்சனம்.

"படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் 70 தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. சரத்குமார் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் பட யூனிட்டுக்கு விருந்து கொடுத்து நன்றி தெரிவிக்க உள்ளார்" என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions