இளம் நடிகர்களின் ஆதரவு சரத்குமாருக்கே...

Bookmark and Share

இளம் நடிகர்களின் ஆதரவு சரத்குமாருக்கே...

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளன. அதில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரு அணியாக உள்ளனர்.

நடிகர் சங்கம் இருந்த இடத்தை தரை மட்டமாக்கி அந்த இடத்தில் புதிய கட்டிடத்தையும் கட்டாமல், தியேட்டர் ஒன்றிற்கு குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்டதை விஷால் அணியினர் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அந்தப் பிரச்சனையால்தான் இளம் நடிகர்கள் அனைவரும் நாசரை முன்னிறுத்தி தேர்தலில் குதித்துள்ளனர்.

இதனிடையே சிம்பு, தனுஷ் உள்ளிட்ட மற்ற சில இளம் நடிகர்கள் சரத்குமார் அணிக்கே ஆதரவு தர உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின. வாலு திரைப்பட சக்சஸ் மீட்டிங்கில் சரத்குமார் அணிக்கே தன்னுடைய ஆதரவு என சிம்பு நேற்று அறிவித்தார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions