உத்தம வில்லன் ரிலீஸ்: அரசு தலையீடு எதுவும் இல்லை - சரத்குமார்

Bookmark and Share

உத்தம வில்லன் ரிலீஸ்: அரசு தலையீடு எதுவும் இல்லை - சரத்குமார்

உத்தம வில்லன் படம் ரிலீஸ் பிரச்னையில் தமிழக அரசின் தலையீடு எதுவும் கிடையாது என சரத்குமார் கூறினார்.  ரமேஷ்அர்விந்த் இயக்கத்தில், கமல் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட உத்தமவில்லன் படம் நேற்று வெளியாகவில்லை.

தயாரிப்பாளர் தரப்புக்கும், விநியோகஸ்தர்கள் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் தடைபட்டது. நேற்று இரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டு இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் காலையிலும் படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சரத்குமார் பேசுகையில், உத்தம வில்லன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படம் ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்பிரச்னையில் தமிழக அரசின் தலையீடு எதுவும் கிடையாது என்று கூறினார்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions