நடிகர் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த சதி: சரத்குமார் பேட்டி

Bookmark and Share

நடிகர் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த சதி: சரத்குமார் பேட்டி

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நடிகர் சங்க தேர்தலில் எந்த தேர்தலிலும் இல்லாத பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. புரியாத ஒன்றை தெரியாமல், அறியாமல் சிலர் பேசுகின்றனர்.

2011–ம் ஆண்டு முதல் நடிகர் சங்க பொறுப்பில் இருக்கிறேன். தலைவராக விஜயகாந்த் இருந்த போது செயலாளராக பொறுப்பு வகித்தேன். அப்போது நடிகர் சங்கத்துக்கு 4.25 கோடி கடன் இருந்தது. அதனை அடைத்து விட்டோம். அந்த கடனை அடைத்ததில் ராதாரவியின் ஒத்துழைப்பும், உழைப்பும் பின்னால் இருக்கிறது.

நடிகர் சங்க பிரச்சினை மட்டுமன்றி திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளிலும் தீர்வு கண்டுள்ளோம். சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நடிகர்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

தென் இந்திய நடிகர் சங்கம் 1952–ல் துவங்கப்பட்ட பாரம்பரிய மிக்க சங்கம். இந்த சங்க நடவடிக்கைகளில் குற்றம் சுமத்த நினைப்பவர்கள் தங்கள் கருத்துக்களை பொதுக்குழுவில் தெரிவித்து இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெளியில் உட்கார்ந்து கொண்டு தவறாக பேசுகிறார்கள். தலைவராக இருப்பவருக்குதான் அந்த வலி தெரியும்.

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நடிகர் சங்கம் மீண்டும் கடனில் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். எதிர் தரப்பினர் புரியாமல் பேசுகின்றனர்.

நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் தி.மு.க.வில் இருக்கும் பூச்சி முருகன் வழக்கு போட்டு இருக்கிறார். நடிகர் சந்திரசேகர் முதல்–அமைச்சர் புகழ்பாடுவதாக என்னை சொல்கிறார். அவர் யாருடைய தூண்டுதலில் இப்படி பேசுகிறார் என்று நானும் சொல்ல முடியும். இந்த பிரச்சினையில் அரசியல் பின்னணி இருக்கிறதா அல்லது தனிப்பட்ட நபர் தூண்டுதல் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.

நடிகர் சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கு நான் அஞ்சப்போவதில்லை. எங்கள் அணிக்கு தோல்வி பயம் இல்லை. நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறுவது நிச்சயம்.

நடிகர் மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார். அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான். நாடகத்தில் இருந்து தான் சினிமா வந்தது. நாடக நடிகர்களை சினிமா துறையில் இருந்து பிரித்து பார்க்க முடியாது.

சிவாஜி மணி மண்டபத்தை பெரிய இடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.


Post your comment

Related News
சரத்குமார் படத்தில் நடிக்கும் விஷால்!
ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த விஷால்!
பொதுக்குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? சரத்குமாருக்கு விஷால் கேள்வி
பாண்டவர் அணி மீது கடும் நடவடிக்கை: தேர்தல்அறிக்கையில் சரத் பதிலடி
சரத்குமார் ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்கம் என்ற தடையமே இருக்காது: நாசர் அதிரடி
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நடிகர் சங்க தேர்தலால் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் ஏற்பட்ட மோதல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: 68 வேட்புமனுக்கள் ஏற்பு!
நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!
தவறான பேசிய விஷால், எஸ்.வி.சேகர் நோட்டீஸ்: சரத்குமார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions