பொதுக்குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? சரத்குமாருக்கு விஷால் கேள்வி

Bookmark and Share

 பொதுக்குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? சரத்குமாருக்கு விஷால் கேள்வி

நேற்று சரத்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து 'என் மீது கூறப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. கடந்த செப்டம்பர் 29–ந்தேதியே நடிகர் சங்க கட்டிட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்' என்று தெரிவித்தார். 

இதுகுறித்து நடிகர் சங்க புதிய பொதுச்செயலாளர் விஷால் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “ நடிகர் சங்கத்தை அனைத்து அமைப்புகளுக்கும் முன் உதாரணமான சங்கமாக மாற்றிக் காட்டுவது எங்கள் கடமை. 

நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத்தருவதே எங்கள் முதல் வேலை. நாடக நடிகர்களின் நிலையை பார்க்கும்போது கண்கலங்குகிறது. அவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய புதிய இணைய தளம் தொடங்கப்படும். இது அவர்களுக்கு பெரிய அடையாளத்தை தரும். 

இளம் அணியினர் சேர்ந்து இந்த வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார்கள். நடிகர் சங்க நிலத்தில் கட்டப்பட இருக்கும் புதிய கட்டிடம்தான் எங்கள் விலாசம் என்ற பொறுப்புடன் பணியை தொடங்குவோம். 

பொதுக்குழுவை கூட்டி நடிகர் சங்க கட்டிடத்துக்கான ஒப்பந்தம் போட்டபோதாக முன்னாள் தலைவர் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது தேர்தலுக்கு முன்பே புதிய கட்டிடத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்காதது ஏன்?.. என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து விட்டு முடிவு எடுப்போம்” என்றார் விஷால். 

 


Post your comment





Related News
சரத்குமார் படத்தில் நடிக்கும் விஷால்!
ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த விஷால்!
பாண்டவர் அணி மீது கடும் நடவடிக்கை: தேர்தல்அறிக்கையில் சரத் பதிலடி
சரத்குமார் ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்கம் என்ற தடையமே இருக்காது: நாசர் அதிரடி
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நடிகர் சங்க தேர்தலால் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் ஏற்பட்ட மோதல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: 68 வேட்புமனுக்கள் ஏற்பு!
நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!
தவறான பேசிய விஷால், எஸ்.வி.சேகர் நோட்டீஸ்: சரத்குமார்
பொறுப்பிற்கு நல்லவர்களே வர வேண்டும்! - கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions