நடிகர் சங்கப் பிரச்சினை உலகமகா பிரச்சினையா? சரத்குமார் கேள்வி!

Bookmark and Share

நடிகர் சங்கப் பிரச்சினை உலகமகா பிரச்சினையா? சரத்குமார் கேள்வி!

ரோட்டரி கிளப்பின் இளைஞர்களுக்கான பிரிவான ரோட்ராக்ட் அமைபில் திறம்பட செயல்பட்ட இளைஞர்களுக்கு ஜான் பிரிட்டோ கல்விக் குழுமம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சரத்குமார் விருதுகளை வழங்கினார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர் பேசிய போது, இன்று ஞாயிற்றுக்கிழமை எங்கே வெளியில் போகிறீர்கள் என்றார் என்மனைவி.ஞாயிற்றுக்கிழமை எங்காவது வெளியில் நான் போனால் திட்டுவார். கல்லூரி மாணவர்கள் பல சாதனைகளையும் சமுக சேவைகளையும் செய்து இருக்கிறார்கள். அவர்களை காணச் செல்கிறேன் என்றேன். போய் விட்டு வாருங்கள் என்றார்.

எதையும் பேசாமல் செயலில் காட்டிய உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.இங்கே  நுழையும் போது மீடியாக்காரர்கள் நடிகர் சங்கத்தேர்தல் பற்றிக் கேட்டார்கள்.
நடிகர் சங்கப் பிரச்சினை என்பது உலகமகா பிரச்சினையா? அது முடிந்து விட்டால் குளோபல் வார்மிங் சரியாகிவிடுமா? பூமி வெப்பமானது குளிர்ந்து விடுமா? ஓசோன் படலம் ஓட்டை அடைபட்டு விடுமா?  நாட்டுக்குத் தேவையான பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும் போது சின்னச்சின்ன பிரச்சினைகளைத்தான் பெரிது படுத்துவார்கள் இதுதான் உலகம்.

நடிகர் சங்கப் பிரச்சினை அது பெரிய விஷயமே இல்லை.

உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள்தான் நாளைய நாட்டின் தலைவர்கள். தனி மனிதனால் எதுவும் செய்ய முடியாது.நீங்கள் ஒன்று சேர்ந்தால் எவ்வளவோ சேவைகள் செய்ய முடியும் சாதிக்கலாம். எது லட்சியம் என்பது முக்கியம். விடாமுயற்சி, உழைப்பு வேண்டும் என்பது முக்கியம். 

நான் டெல்லியில் பிறந்தேன். வளர்ந்தபிறகு சென்னை வந்தேன். லயோலா கல்லூரியில் பியூசி படித்தேன். நல்ல மாணவன் என்று பரிசு பாராட்டு எல்லாம் வாங்கினேன். பியூசி முடிந்ததும் கல்லூரியில் ஸ்டிரைக் செய்தேன்.

உனக்கு இங்கே இடம் இல்லை என்று துரத்தி விட்டார்கள். அப்புறம் நான் போன இடம் புதுக்கல்லூரி.அங்கே உனக்கு என்ன இடம் வேண்டும் என்ற போது ஏதாவது கொடுங்கள் என்ற போது பி.எஸ்.சி. மேத்தமேடிக்ஸ் கொடுத்தார்கள். சினிமாவில் பணம் எண்ண, அப்போது படித்த கணக்கு இப்போது உதவுகிறது. பிறகு பெங்களூர் போனேன் கடைகடையாக பேப்பர் போட்டேன். 

சைக்கிள் பாயாக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தேன்.. அதற்காக கன்னடம் கற்றேன். நான் கன்னடக்காரர்களைவிட நன்றாக கன்னடம் பேசுவேன்.அப்போது தேவை என்பதால் கன்னடம் கற்றேன்.சைக்கிள் கடையில் வேலை பார்த்தேன். .சைக்கிள்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்வேன்.

அக்குவேறு ஆணிவேறாக கழற்றி மாட்டத் தெரியும் பணம் சம்பாதித்தேன். படம் எடுத்தேன். அடுத்த ஜென்மத்தில் நல்ல பாம்பாகப் பிறந்தாலும் படமெடுக்கமாட்டேன். அவ்வளவு கஷ்டப் பட்டேன்  உங்களை மீண்டும் பாராட்டுகிறேன். உழைப்பு , உயர்வு என்கிற சிந்தனையோடு இருங்கள் சாதிக்கலாம் இவ்வாறு சரத்குமார் பேசினார்.


Post your comment





Related News
சரத்குமார் படத்தில் நடிக்கும் விஷால்!
ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த விஷால்!
பொதுக்குழுவை கூட்டாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? சரத்குமாருக்கு விஷால் கேள்வி
பாண்டவர் அணி மீது கடும் நடவடிக்கை: தேர்தல்அறிக்கையில் சரத் பதிலடி
சரத்குமார் ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்கம் என்ற தடையமே இருக்காது: நாசர் அதிரடி
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நடிகர் சங்க தேர்தலால் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் ஏற்பட்ட மோதல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: 68 வேட்புமனுக்கள் ஏற்பு!
நடிகர் சங்கச் சிக்கலில் கடைசி நேரத்தில் சமரசம் பேசும் ரோஜா!
தவறான பேசிய விஷால், எஸ்.வி.சேகர் நோட்டீஸ்: சரத்குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions