கார் விபத்தில் சிக்கிய இயக்குனர் சரவணன்: சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்

Bookmark and Share

கார் விபத்தில் சிக்கிய இயக்குனர் சரவணன்: சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்

ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, ‘வலியவன்’, விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களை இயக்கியவர் சரவணன் (வயது 38). இவர் இன்று காலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பவுத்திரம் கிராமத்திற்கு காரில் புறப்பட்டார். அவருடன் அவரது நண்பரும், உதவி இயக்குனருமான கவுதமன் (28) என்பவரும் சென்றார். 

இன்று காலை 11 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த அயன்பேறையூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. அந்த வழியாக வந்தவர்கள் இதை கண்டு மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு மங்களமேடு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். காருக்குள் சிக்கி இருந்த இயக்குனர் சரவணன், கவுதமன் ஆகிய இருவரையும் அவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post your comment

Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா
என்னது இது? சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மால்களில் நடக்கும் சோதனை எனக்கு வேதனை அளிக்கிறது: அபி சரவணன்
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions