நயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன்: சரவணா ஸ்டோர் உரிமையாளர் அதிரடி

Bookmark and Share

நயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன்: சரவணா ஸ்டோர் உரிமையாளர் அதிரடி

சமீபகாலமாக சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் நடிப்பது அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தோன்றி நடித்த விளம்பரங்கள் பலரிடத்திலும் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் ஆரம்ப விழா தொடங்கி, தீபாவளி, பொங்கல், கோடைக்கால விளம்பரம் வரை அனைத்து விளம்பரங்களிலும் இவரே விளம்பர மாடலாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தற்போது துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், தான் கதாநாயகனாக நடித்தால் முதல் படமே நயன்தாராவுடன்தான் ஜோடி சேருவேன் என்று கூறியுள்ளார். 

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தார். முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, நான் திரையுலகில் முதல்படமாக நயன்தாராவுடன் நடித்து கால்பதிப்பேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
17 வருடங்களுக்கு பின் கௌதம் மேனன் கொண்டு வரப்போகும் மேஜிக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்.!
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions