தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்

Bookmark and Share

தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்

பிரபல மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபல மலையாள நடிகை ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாலையோரம் கிடந்து பின்னர் பரிதாபமாக இறந்தது ரசிகர்களின் நினைவுக்கு வந்துள்ளது. 

பிரபல மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த மலையாள நடிகை நிஷா நூரின் பரிதாபமான மரணம் குறித்து தற்போது மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. 

அவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். நிஷாவின் வாழ்க்கை பரிதாபமாக ஆனதற்கு தயாரிப்பாளர் ஒருவரே காரணம் என்று கூறப்பட்டது.

உலக நாயகனின் டிக் டிக் நடிக் படத்தில் நடித்தவர் நிஷா நூர். அவர் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். ஹிட் படங்களை கொடுத்த அவர் திடீர் என்று நடிப்பை நிறுத்தினார்.

தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதால் அவர் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது. பாலியல் தொழில் விவகாரம் பற்றி தெரிந்த இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை.

தயாரிப்பாளர் ஒருவரால் தடம் மாறிப் போன நிஷா எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்தது. பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே சாலையோரம் அவர் எலும்புக்கூடு நிலையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


நிஷாவின் உடலில் புழுக்கள் மற்றும் எறும்பு ஓடிக் கொண்டிருந்தது. முஸ்லிம் முன்னேற்ற கழக ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
முறுக்கு மீசையுடன் ரஜினி - புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions