மார்கரிதா படத்தில் சரிகா நடிக்க வேண்டியது: இயக்குனர்

Bookmark and Share

மார்கரிதா படத்தில் சரிகா நடிக்க வேண்டியது: இயக்குனர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உட்பட பல பிரபலங்கள் பாராட்டியிரருக்கம் ’மார்கரிதா வித் ஸ்ட்ரா’ திரைப்படத்தில் நடிகை ரேவதியின் கதாபாத்திரத்தில் கமலின் முன்னாள் மனைவியான சரிகாவே நடிக்க இருந்ததாக அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் ஷோனாலி போஸ் கூறுகையில் “இந்தப் படத்தில் ரேவதியின் கதாபாத்திரத்தில், நாயகியைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட சிறந்த நடிகையான சரிகாவையே முதலில் தேர்வு செய்தோம். அவருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்து விட்டது.

ஆனால் படத்தின் நாயகி கல்கி கொச்லின்னின் கால்ஷீட்டுக்காக நாங்கள் 3 மாதம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதற்குள் அவர் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். பிறகு நாங்கள் நடிகை ரேவதியிடம் படத்தின் ஸ்கிரிப்டை படிக்கக் கொடுத்தோம். உடனே அவர் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இந்தப் படத்தில் அவர் அற்புதமாக பணிபுரிந்துள்ளார். என்றார்.

இந்த திரைப்படத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் சக்கர நாற்காலியிலேயே முடங்கியிருக்கும் கதாபாத்திரத்தில் கல்கி கொச்லின் நடித்துள்ளார்.

சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள நிலையில், தன் மனைவி மூலமாக இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அமீர் கான் இந்த படத்தின் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன்  “உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள உண்மையான, துணிச்சலான படம்..” என்று பாராட்டியுள்ளார்.

அமீரை அடுத்து ஹ்ருத்திக் ரோஷனும் இந்த படத்துக்கான சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions