தன் தயாரிப்பில் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் சற்குணம்

Bookmark and Share

தன் தயாரிப்பில் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் சற்குணம்

எனது திரைப்படங்களுக்கும் எனது தயாரிப்பு நிறுவனத்திற்க்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”ன் முதல் படமான மஞ்சப்பை திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது.

இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இக்கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை நான் இயக்கிய களவானி முதல் சண்டிவீரன் வரை என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் திகிலூட்டும் கிரைம் திரில்லராக நகைச்சுவை கலந்த திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions