சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் சினிமா படமாகிறது

Bookmark and Share

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் சினிமா படமாகிறது

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூருக்கும், சுனந்தா புஷ்கருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. 2014–ல் டெல்லியில் உள்ள லீலா ஓட்டலில் சுனந்தா மர்மமாக இறந்து கிடந்தார்.

சாவதற்கு முன் சசிதரூருக்கும் சுனந்தாவுக்கும் இடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே சாவில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சுனந்தா விஷம் அருந்தி இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் பரவின. சசிதரூரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுனந்தாவின் மர்ம சாவை மையமாக வைத்து ராம்கோபால் வர்மா புதுப்படம் இயக்க உள்ளார். இதற்காக சுனந்தா பற்றிய தகவல்களை திரட்டி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்கோபால் வர்மா ஏற்கனவே மும்பை ஓட்டலில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை மையமாக வைத்து ‘அட்டாக் ஆப் 26/11’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். போலீஸ் என்கவுன்டரில் இறந்த தாதாக்களின் உண்மை கதையையும் ‘ரத்த சரித்திரம்’ என்ற பெயரில் படமாக எடுத்தார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions