பிச்சைக்காரனைப் பற்றி பேச மறுக்கும் சசி!

Bookmark and Share

பிச்சைக்காரனைப் பற்றி பேச மறுக்கும் சசி!

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சசி. பின்னர் பரத்தை வைத்து அவர் இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து படம் மட்டுமே அவருக்கு தோல்வியாக அமைந்தது.

அந்த படத்துக்காக சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்த பரத்தை, அதைப்பார்த்து விட்டுதான் சன்னிலியோன் நடித்த ஜாக்பாட் இந்தி படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். இந்தநிலையில், தற்போது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை வைத்து பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் சசி.

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, அதையடுத்து, திருடன், சைத்தான் படங்களில்தான் நடிக்க தயாராகிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த நேரத்தில் சசி சொன்ன பிச்சைக்காரன் கதை அவருக்கு பெரிய நம்பிக்கை கொடுக்கவே, அந்த படங்களை தள்ளி வைத்து விட்டு இந்த படத்திற்கு கால்சீட் கொடுத்தார்.

ஆக, முதல்கட்ட படப்பிடிப்பை நடத்திவிட்ட சசி, விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடக்க உள்ளதாம்.இந்நிலையில், பிச்சைக்காரன் படம் குறித்து சசியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால், எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அதனால் ஏப்ரல் 11-ந்தேதிக்கு பிறகு பிச்சைக்காரன் படம் குறித்து பேசுவோம் என்கிறார்.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions