சசியுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்?

Bookmark and Share

சசியுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்?

இயக்குனர் சசி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சசி, தனது அடுத்த படத்தை ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு பேமிலி எண்டர்டெய்மென்ட் படமாக எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷை சசி நேரில் சந்தித்து கதை ஒன்று விளக்கி கூறியதாக கூறப்படுகிறது. சசி சொன்ன கதை பிடித்து போனதும் ஜி.வி.பிரகாஷ் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் சசி படத்திற்கு குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க சிறிது காலஅவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் கைவசம் புருஸ்லீ, கடவுள் இருக்கிறான் குமாரு, ராஜீவ் மேனன் இயக்கும் புதிய படம், பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இப்படங்கள் முடிந்தபிறகு சசி இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. 


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions