பிச்சைக்காரனைப்பற்றி வாய்திறக்க மறுக்கும் சசி!

Bookmark and Share

பிச்சைக்காரனைப்பற்றி வாய்திறக்க மறுக்கும் சசி!

பூ படத்திற்கு பிறகு ஐந்து வருடம் கழித்து சசி இயக்கிய படம் ஐந்து ஐந்து ஐந்து. இந்த படத்தில் பரத் நடித்திருந்தார். இப்படத்திற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றி நடித்தார் பரத். ஆனால் படம் தோல்வியடைந்து அவருக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இருப்பினும், அப்படத்தில் பரத்தின் சிக்ஸ்பேக்கை பார்த்துதான் ஜாக்பாட் இந்தி படத்தில் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அப்படத்தின் அதிர்ச்சி தோல்வி டைரக்டர் சசியை பெரிதாக பாதித்தது.

இந்த நிலையில்தான், பிச்சைக்காரன் என்றொரு கதை ரெடி பண்ணி அதை விஜய் ஆண்டனியிடம் சொன்னார். ஏற்கனவே தனக்கு டிஷ்யூம் படத்திற்கு இசையமைக்க சான்ஸ் கொடுத்தவர் சசி என்பதால், அவர் சொன்ன கதையை ஓகே பண்ணி, தயாரித்து நடிக்கத் தொடங்கிய விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார் என்கிறார்கள்.

அப்படம் குறித்து இந்தியா பாகிஸ்தான் பிரஸ்மீட்டில் மீடியாக்கள் கேட்டபோது, இந்த படத்தின் கதையை முழுசாக சொல்ல முடியாது. ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விசயத்தில் பிச்சைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அதைதான் இந்த படம் சொல்ல வருகிறது என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். ஆனால் படத்தை இயக்கும் சசியோ, ஒரு பிட் நியூஸ்கூட இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்று கேட்டால்கூட இப்போதைக்கு அதுவும் சீக்ரெட்தான் என்று வாயை இறுக மூடிக்கொள்கிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions