‘‘பதவியும் வேணாம்; உறவும் வேணாம்’’ சசியின் ‘மன்னிப்பு கடிதம்’ வெளியீடு

Bookmark and Share

‘‘பதவியும் வேணாம்; உறவும் வேணாம்’’ சசியின் ‘மன்னிப்பு கடிதம்’ வெளியீடு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்  சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கினார். அதன்பின், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறினார் சசிகலா. இதனைத்தொடர்ந்து, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்களையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெயலலிதா அதரடியாக நீக்கினார்.

கட்சியிலிருந்து நீக்கிய சில நாட்களிலேயே, சசிகலா மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். பின்னர், மன்னித்து ஏற்றுக்கொள்வதாக அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார்.

சசிகலா எழுதிய அந்த மன்னிப்பு கடிதத்தில், எனது பெயரை பயன்படுத்தி என்னுடைய உறவினர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல குழப்பங்களும் விளைவிக்கப்பட்டது. இது எனக்கு தெரியாமல் நடந்தது உண்மை.

மேலும், என்னுடைய உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கும் வேண்டாதவர்கள்.

துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் எனக்கும் எவ்வித ஒட்டுமில்லை உறவுமில்லை. எனக்கு கட்சியில் எந்த பதவியும் வேண்டாம். அக்காவின் தங்கையாக இருக்க விரும்புகிறேன் என்று அவர் அந்த மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலையில், அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கும், முதல்வராக பொறுப்பேற்க துடிக்கும் போராட்ட குணங்களும் தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை காண்பித்து வருகிறது என்றே சொல்லலாம்.

தொண்டர்களைத் தவிர்த்து, கட்சி எம்பி., எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவளித்துவருவது அதிமுக தொண்டர்களிடையேயும், தமிழக மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பல்வேறு கருத்துக்கணிப்புகளும்கூட சசிகலாவுக்கு எதிர்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இவர் எதற்காக இந்த ஆரவாரம் செய்து வருகிறார் என்று புரியவில்லை என அதிமுகவினரிடையே பரவலாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

 

 


Post your comment





Related News
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions