சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்

Bookmark and Share

சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்

நடிகர் கமல்ஹாசன் சில நேரத்தில் சீரியஸாக பேசுகிறார். ஆனால் அவர் சொல்வதை சில நேரத்தில் நம்பக்கூட முடியவில்லை. சமூக விஷயத்தில் தன் கருத்தை ஸ்ட்ரிக்ட் ஆக முன்வைக்கும் அவர் சமீபகாலமாகவே மிகத்தீவிரமாய் செயல்பட்டு வருகிறார்.

அதிலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் ஜல்லிக்கட்டு, அரசியல் திடீர் மாற்றங்கள், அடுத்தடுத்த எதிர்பாராத விஷயங்கள் என தனக்கே உரிய ஸ்டைலில் சிலருக்கு புரிந்தும் புரியாமலும் பதிவிட்டு வருகிறார்.

ஆனால் இவருக்கே சவாலாக சிலர் இவர் சொன்னதாக சில தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதிலும் கமலின் ஸ்டலை அப்படியே ஃபாலோ செய்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் தகவல் ஒன்று மிக வைரலாக பரவி வருகிறது. இதில் பெரிய கவிதை ஒன்றை எழுதி அதில் சசிகலாவை கள்ள நரி என்றும், ஓ.பி.எஸ் ஐ ஓநாய் என்றும் சொல்வதுபோல உள்ளது.

ஆனால் கமல் இதை மறுத்துள்ளார். Whatsappல் நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல. செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும் என கூறியுள்ளார்.

அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;-

செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!


வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!


ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!


அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!


காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions