நாலாயிரம் கோடியை திருடி தொழிலதிபரை கொன்ற சசிகலா - சசியின் மறுபக்கம்

Bookmark and Share

நாலாயிரம் கோடியை திருடி தொழிலதிபரை கொன்ற சசிகலா - சசியின் மறுபக்கம்

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்படும் நபர்களில் தமிழ் நாட்டில் முதலிடம் வகிப்பவர் சசிகலா அவர்கள்.  அவரை பற்றி வைரலாக வலம்வரும் இந்த செய்தி...

#ஒரு_அலசல்

பாலு ஜுவல்லரியை நினைவு இருக்கிறதா...???

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...!!!

#பாலு ஜுவல்லரி என்பது 1990களில் சென்னையில் பிரபலமாக கொடிகட்டி விளங்கிய நகைக்கடை.

1991 - 1996 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த இருண்ட காலம் அது.  தனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து சசிகலாவின் கில்லாடித் தனத்தால் 40 கோடி ரூபாய்க்கு தங்கம் கடனாக வாங்கப்பட்டது.

பணம் தருகிறேன் முதலில் நாங்கள் கேட்க்கும் நகைகளை தாருங்கள் என்று கூறி அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து அக்கடையின் ஒட்டுமொத்த நகைகளையும் போயஸ் தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்..!

அனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு அக்கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என தேர்வு செய்து எடுத்துக் கொண்டார் சசிகலா.

அதற்கான பணம் இதோ அனுப்புகிறேன், அதோ அனுப்புகிறேன், நாளை அனுப்புகிறேன் எனக் கூறி ஒரு சல்லி பைசா கூட கொடுக்கப்படாமல் சசிகலாவால் நாயாக அலைக்கழிக்கப்பட்டார் அந்த பாலு செட்டியார்.

அன்றைய காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் இருந்த முதல்வரையோ, அவரது தோழியையோ தட்டி கேட்க்கவோ, பாலுவுக்காக ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவோ முன்வராத காரணத்தால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சசி வாங்கிய நகைகளுக்கு பணம் கொடுக்க மனமில்லாமல் பாலுவை மொத்தமாக மொட்டையடித்தனர்..!

அதனால் பாலு தனது கடன் காரர்களுக்கு பணத்தை செலுத்த முடியாமலும் சரக்கு வாங்கிப் போட்டு கடையை அலங்கரித்து வியாபாரத்தை தொடர முடியாமலும் தடுமாறினார்.

அன்றைக்கு 40 கோடி என்பது இன்றைய மதிப்பில் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க இரண்டு விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

1.தங்கத்தின் அதீத விலை ஏற்றம்.

2.இன்றைய பண வீக்கம்.

இதன்படி பார்த்தால், அன்று 40 கோடி ரூபாய் தங்கம் என்பது இன்று 4,000 கோடிக்குச் சமம்.

பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி உரிமையாளர் சசிகலாவின் அடியாட்களால் கடுமையாக மிரட்டப் பட்டார்.

பணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில் அதனால் தனது கடையை தொடர்ந்து நடத்த முடியாமலும், தனது கடன்கார்ர்களுக்கு பணத்தை கொடுக்க பதில் சொல்ல முடியாத நிலையிலும் வேறு வழியின்றி பாலு செட்டியார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார்!

அந்த பாலு ஜூவல்லரி மட்டும் இன்று இருந்திருந்தால் சென்னையில் வேறு எந்த கலப்பட நகைக் கடையும் காலூன்றி இருக்கவே முடியாது!
அத்தனை நம்பிக்கையான வியாபார நிறுவனம் அது.

அதன் ரேடியோ விளம்பரம் எல்லாம் கூட.. 

புன்னகை மன்னரின் பொன்நகை கூடம்... பாலு ஜூவ்லர்ஸ் என தொடங்கியே வரும்.

பாலு ஜுவல்லரிக்காக தினசரிகளில் அன்று வந்த விளம்பரம் (1991 - 1996) கவித்துவமாக இருந்தது.கவிஞர் வைரமுத்து விளம்பர வாசகங்களை எழுதி இருந்தார்.

"பொன்னில் நால்வகை என்பார்கள். ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாந்தரூபம் ஆகிய நால்வகை.

ஐந்தாவதாக ஒரு பொன் இருந்தால், அதற்கு பாலு என்று பெயர் வைக்கலாம்." என்று...

ஆனால், அந்த பாலு போய்ச் சேர்ந்து விட்டார், இயற்கையாக அல்ல.  அவரை அநியாயமாக கொன்றது யார்...?????

தனக்கு சுயநலமே இல்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு மாபியா கும்பலை தன்னோடு சேர்த்துக் கொண்டு ஊரை அடித்து உலையில் போட்டுக் கொண்டிருக்கும் இந்த சசிகலா தான்....!!!!

அந்த ஜெயலலிதாவை தனது லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அவரை கொன்ற சசிகலாதான்..!

இப்படிப்பட்ட ஒருவருக்கா அதிமுக அவரையா முதல்வராக்க துடிக்கிறார்கள்?

சிந்தியுங்கள் நன்பர்களே......!!!!!!

சசியின் அட்டகாசம் இது மட்டுமா??

இப்படி போகிறது அந்த சமூகவலை பதிவுகள்.  

சின்னம்மா நீங்கள் நல்லவரா கெட்டவரா?  ரொம்ப குழப்பிறாங்களே.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions